சிகரம் தொடலாம் பெண்ணே...!
சின்னச் சின்ன, முயற்சிகள் செய்தாலும்
சிகரம் தொடலாம் பெண்ணே வா!
சிந்தையைப் பணியில் வைத்தே நீயும்,
சிரத்தைக் கொண்டு செயல்பட்டால்
சிகரம் தொடலாம் பெண்ணே வா!
சிந்தனைச் சிறகை விரித்துப்
பறக்கத் துவங்கினால்
பறவையும் உனக்குக் கீழ்தான்
சீரிய வெற்றிகள் பலவும் ஈட்டின்
சிகரம் தொடலாம் பெண்ணே வா!
சின்னதோ, பெரியதோ,
செய்வதை நீயும்
செவ்வனச் செய்தால்
சிகரம் தொடலாம் பெண்ணே வா!
செய்யும் தொழில்தனை நாளும்
சிறப்பாய் நீயும் செய்து விட்டால்
சிகரம் தொடலாம் பெண்ணே வா!
சின்னப் பணியே ஆயினும் நீ
சீரிய வெற்றிகள் பெற்று வீட்டால்
சிகரம் தொடலாம் பெண்ணே வா!
சிட்டுக்குருவி அதன் சுறுசுறுப்பும்
சின்ன எற்ம்பு உழைப்பும்
நீ கற்று விட்டால்
சிகரம் தொடலாம் பெண்ணே வா!
- - சி. தேவி பிரியா, படுக்கப்பத்து, திருச்செந்தூர்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.