உணர்வோடை
தலைகீழாகத் தொங்கிடும்
மின்விசிறியின் வலிதனை
எனது மல்லாக்கு நேர்பார்வை
தினம் கவனித்துக் கொண்டுதான்
இருக்கிறது...
எனது கோரைப்பாய்களின்
இடைவெளியில் புகுந்து
ஆராய்ந்து அயர்கிறது
எனது உள்ளுணர்வு...
சுற்றி உள்ளவையெல்லாம்
என்மேல் எடையமைய
இன்றிவரை எடை
குறைக்கப் பழகவில்லை
எனது இதயம்...
யாரேனும் தட்டிவிடுவாரோ
என்ற எண்ணத்திலே
வாசலை நோக்கியேப்
பார்வை பரவுகிறது
காலம் போனது மட்டுமே
பலன்...
கயிறுக்கட்டு கழுத்து
நெறிக்கப் பழகிய நீ
கயிற்றின் விலையில்
ஏன் பேரம் பேசுகிறாய்...
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.