லஞ்சம் தவிர்த்திடு...

புண்ணியத்தின் பலன்கள் விழுதுகள் கொண்டவை
தலைமுறை தாண்டியும் தொடரும் கதை...
பாவத்தின் பலன்கள் பாறை போன்றவை
கடைசித் தலைமுறை வரை பின்தொடரும்...
அன்பளிப்பு, பரிசு, வெகுமதி, லஞ்சம்
உனக்குத்தான் எத்தனை பெயர்கள்
மதி இழந்த மாமனிதர்கள் உனக்கிட்டவை...
உழைக்கும் பணமே உடலில் ஒட்டாத நிலையில்
அடுத்தவர் பணத்தில் ஆடம்பர வாழ்வு
எத்தனை பெரிய அவலம் நாட்டில்...
உழைப்பைச் சுரண்டும் ஒரு கூட்டம்
உழைக்க மறுக்கும் கும்பல் மறுபக்கம்
அவ்வப்போது மானிடனே ஏன் இந்த அவலம்...
கடமையைச் செய்ய கையூட்டு நிலை
லட்சியத்தை அடைய லஞ்ச ஊழல்
யாசகம் கேட்பதை உதாசீனப்படுத்தும் உலகம்
கையூட்டு பெறுவதில் கவலை கொள்வதில்லை....
ஆறறிவு படைத்த மனிதனே நீ
ஐந்தறிவு கொண்ட உயிர்களிடம் நீ
பாடத்தைப் படி, பாடத்தைக் கற்றுக் கொள்
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே....
சுற்றும் பூமியில் நம் பாதை
நேராகவும் நியாயமானதாகவும் நடை போடட்டும்
உறுதியோடும், வலிமையோடும் போராடு...
மானிடனே குன்றென நிமிர்ந்து நில்
எதுவும் நிரந்தரமில்லை இப்பூவுலகில்
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றமே...
அச்சத்தை துச்சமாக நினைத்து முன்னேறு
அஞ்சாமலும் கண் துஞ்சாமல் அயராது உழைத்திடு...
உழைக்காத பணம் ஒருபோதும் உடலில் ஒட்டுவதில்லை
முயலாமை கொள்ளாமல் நம்பிக்கை கொண்டு
தரணியில் கால் தடம் பதித்திடு...
- முனைவர் ப. விக்னேஸ்வரி, திருமலையம்பாளையம், கோயமுத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.