தாய்மொழி
திருவான தமிழ்நாடு திசையெங்கும் போற்ற
தென்மொழியாம் தமிழ்மொழியால்
சிறப்பெங்கும் ஆற்ற
திகழ்வளமும் பொருள்நலமும்
சீர்பெறவும் தேற்ற
திருத்தக்கச் செம்மொழியாய்த்
திகழ்ந்திடுமே வாழி.
ஒருமொழியும் தோன்றாத ஒருநாளில் தோன்றி
உயர் மொழியாய் மண்ணகத்தில் நிலையாக ஊன்றி
பெருகவரும் இலக்கியங்கள் பலவாகக் கொண்ட
பெருமைமிகு தாய்மொழியே
தமிழ்மொழியாம் என்பேன்.
கருவாகப் பிறமொழிகள் தன்மூலம் தோன்ற
கருத்தாகத் தாயெனவே அம்மொழிகள் வாழ
உருவான செந்தமிழோ உலகினையே ஆளும்.
உணர்வாலே நம்மொழியை நாம்போற்றி வாழ்வோம்.
ஒருநாளும் விடமாட்டோம்
உயர்த்துவதே நோக்கம்
உண்மையிது தாயெனவே தெய்வமெனக் கொண்டோம்.
வருநாளில் தமிழன்னை ஆலயமாய் ஆக்கி
வையகத்தில் நிலைபெறவே தொழுதிடுவோம் வா... வா...
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.