சொத்து
குருவிக்கும் கூடு உண்டு என்பார்கள் - ஆனால்
எனக்குத் தெரிந்து
என் அப்பா வீடு ஏதும் கட்டியது இல்லை
எல்லாம் இருந்தும்
குறை சொல்லும்
சில மனைவியைப் போல்
அம்மா இல்லை.
அப்பா இறந்த தினம்
வட்டிக்குக் கடன் கொடுத்தவர்கள்
வரிசை கட்டி நின்றனர்
குடும்ப மானம் காக்க
அம்மாவின் நகை
அடமானக் கடைக்குச் சென்றது.
ஓடுகிறேன், ஓடுகிறேன்
வாழ்வில் பணம் சேர்க்க வேண்டுமென
இரவு, பகல் பாராமல்
உழைத்துக் கொண்டிருக்கிறேன்
அப்பாவைப் போல்!
இதுவரை நினைவு தெரிந்து
சொத்து ஏதும் சேர்க்கவில்லை
எனக்கும் நீரிழிவு நோய்
வந்து சேர்ந்தது
அப்பாவைப் போல்!
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.