புரிந்தால் சரி...!
சிலர் சுற்றி வளைத்துப்
பேசிப் புரிய வைப்பார்கள்
சிலர் நேரடியாகப் பேசி
புரிய வைப்பார்கள்
சிலர் பேசாமலேயே
சைகை வழிகளில்
புரிய வைப்பார்கள்
புரிய வைப்பதை
எத்தனையோ வழிகளில்
புரிய வைக்கலாம்
அதில் எது
புரிந்து கொள்ளத்தக்கதோ?
அதுவேப் புரிந்து கொள்ள
எளிய வழி
அவள் புரியும்படி
சொல்லென்று கேட்டாள்
அவன் புரியும்படி சொன்னது
அவளுக்குப் புரியவில்லை
கொஞ்சம் தடுமாறினாள்
புரிந்து கொள்ள மீண்டும்
சொல்லிப் புரிய வைத்தான்
மெதுவாக அவளுக்கு
எது புரிந்திருக்கும்?
எது புரியாமல் தவறியிருக்கும்?
ஏதோ, இப்பொழுதாவது
புரிந்தால் சரி...!
- நடேச கணேசன், வேலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.