இயற்கையின் கேள்வி
இந்நாள்வரை இன்னுயிர் வாழ
இடம் தந்த இயற்கையை
இரக்கமின்றி நீ அழிப்பது சரியா...?
சொல் மனிதனே...
வாழ்வு தந்த தாயை வீதியில்
விட்டெறிவது போல்
இனிய வளம் தந்த இயற்கையை
அழித்து உன் பூமியை
சுட்டெரிப்பது சரி தானா...?
நீ பார்க்கும் இவ்வுலகை நின்
சந்ததி பார்க்கும் முன்
நீயே நிர்மூலம் செய்து விட்டால்
நின் பிள்ளைகள் நிலவிலே குடியேறிடுமோ...?
நீ காட்டும் குரோதம் முன்
இயற்கையும் சீற்றம் கொண்டால் - அதை
நின் தேகம் தாங்கிடுமோ...?
இவ்வளம் அழித்து ஈட்டிய இன்றைய
வருவாய் கொண்டு
இரு நெல்லும், நன்னீரும்
நாளை கண்டிட இயலுமா...?
- கி. விக்னேஷ், கோயம்புத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.