நேரம்
காலம் என்றும் காத்திருப்ப தில்லை
காற்றாடி போலச் சுழன்றிடும் நில்லாமல்,
வேலையைச் செய்திடு வேண்டும் பொழுதிலே
வெற்றியே பெறுவாய் வேண்டிய மட்டும்...
கடமையைச் செய்யாமல் கனியும் காலமென
காத்திருக்கும் சோம்பேறிக்குக் கிடைப்பது தோல்வியே,
உடமைகள் எதுவும் உன்னிடம் தங்காது
உன்மத்தன் பட்டம் உடனே கிடைக்கும்...
நேர்மையாய் உழைப்பவனுக்கு நேரம் காலமெல்லாம்
நெருங்கியே வந்து நேசக்கரம் நீட்டும்,
பார்த்திடு உலகை, பாடங்கள் கற்றிடு
பணியைச் செய்பவனுக்கு நேரமெலாம் நல்லதே...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.