காலம்
இரசம் குலைந்து பழுப்பேறிய
நிலைக்கண்ணாடி
முற்றத்தில் கிடந்தபடியே கிடந்தது…
அதில் தன்முகம்பார்த்து ஏமாறும்
நெற்றியில் வெண்புள்ளியுடைத்த
பூனையின் லோசன உறுமலும்
அதன் கால்நகத்தின் பாய்ச்சலும் கூடியிருந்தது…
முன்னெப்போதையும் விட
என் வெண்மயிர்த் தலையை
சதா உறுமிப்பார்க்கிறது அப்பூனை…
இப்போதெல்லாம் சதா பாலுக்குக் காத்திருக்கும்
அப்பூனைக்குத் தெரிந்திருக்கவும் கூடும்
அந்நிலைக்கண்ணாடியின்
இரசப்பிறழ்விற்குள் படிந்திருக்கும்
என் கற்றை கருமயிர்க் காலம்…
- முனைவர் கோ. சுனில்ஜோகி, கோயம்புத்தூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.