நாள்தோறும் கட்டுப்பாடுகள்
வாடகை வீடு
நாள்தோறும் கட்டுப்பாடுகள்
அமுலாக்கம்
*****
ஊஞ்சலில் தனியாக
உட்காரப் பயப்படும் பெண்
மாமியார் வீடு
*****
மருத்துவமனையில்
சொத்துக்கள் கரைகின்றன
புற்றுநோய்
*****
கோழி கிளறுகிறது
சுலபமாகப் புழுக்கள்
பசியாறுகிறது
*****
இரவு வேளைகளில்
கணிசமாகக் குறைகிறது
ஆற்று மணல்
*****
குளத்தில் மீன்கள்
அலகைத் தீட்டியபடி
மீன்கொத்தி
*****
முற்றியது
வெடித்து சிதறுகிறது
இலவம் பஞ்சு
*****
குடியானவன்
வீட்டில் ஒதுங்கிப் போனது
ஏரும் கலப்பையும்
*****
அப்பாவின் மரணம்
மகளின் திருமணம் ரத்து
முதிர் கன்னியானாள்
- ஆர். எஸ். பாலகுமார், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.