எப்ப இதச் சொல்றது...?
சோறு போட்ட கடவுளையெல்லாம்
கூறு போட நினைக்கிற...
ஏறு பூட்டி உழுத வள்ளலையெல்லாம்
நடு வீதியில நிறுத்துற...
கலரு பூசி நடிச்ச எச்சமெல்லாம்
உச்ச நட்சத்திரம் ஆக்குறே...
அரசியல் விளையாட்டையெல்லாம்
தலைப்புச் செய்தியாக்குறே...
நோய், நொடியெல்லாம்
அணு தினமும் இராட்சசனா ஆட்டுது...
ஏழை மனுஷன் சேர்த்த பணமெல்லாம்
பாதாளத்துலப் போகுது...
கோட்டு சூட்டு போட்டவன் வாங்கிய
கடனெல்லாம் தள்ளுபடி ஆகுது...
குடிக்க நீர், உண்ண உணவு, இருக்க இடம்
இதைப் பத்திச் சொல்ல, பேச நாதி இங்க இல்ல...
விவசாய சாதி தினம் தினம்
கோட்டையில கத்திக்கத்தி சாவுது...
அந்தப் பாழாய்ப் போன சில மனுச சாதி
தொலைக்காட்சித் தொடரில பைத்தியமா மூழ்குது...!!
இப்ப இல்லைன்னா...
எப்ப இதச் சொல்றது...?
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.