கவித்துளிகள்
உழைப்பிற்கு உணர்வூட்டிய
களைப்பில் கலங்கிய நீரருந்தினாள்
கரும்புச்சாறு விற்பவள்
*****
வெட்டிய கிளைகளுடன்
ஒட்டிக் கொண்டவளுக்கு சமூகமிட்ட
புதுப்பெயரோ வாழாவெட்டி
*****
வியர்வையை விரும்பி
விந்திற்கிட்டு வெற்றியான விளைச்சலுக்கு
வெற்றிடமானது விலை நிர்ணயம்
*****
இருண்ட வாழ்வின்
விடியலைக் கான இருளிலே மடிகிறான்
சுரங்கத் தொழிலாளி
*****
ஆயுதங்கள் ஏதுமின்றி
ஏற்றத்தால் உயிர்களைக் கொல்கிறது
விலைவாசி உயர்வு
*****
நலம்பெற வேண்டுமென்று
கருவறை அன்னையை வணங்குகிறான்
அனாதைத் தாயின் மகன்
*****
உறவின் உன்னதத்தின்
உணர்வழித்து உள்ளத்தில் சிம்மாசனமிட்ட
சகுனியானது தொலைக்காட்சித் தொடர்
- விருதை சசி, விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.