அச்சம் தவிர்
அச்சம் தவிர
வேறு எதுவும் தெரியாது எனக்கு.
எனெனில்,
அச்சம், மடம், நாணம்
பெண்ணுக்கு உரிய அணிகலன்கள்
என்றே வளர்க்கப்பட்டேன்!
பிடித்ததைப் படிக்கப் பயந்தேன்!
கேள்வி கேட்கத் தயங்கினேன்!
எழுதப்படாத பல கோட்பாடுகளுக்குள் சிக்கினேன்!
எடுப்பார் கைப்பிள்ளை போல் இயங்கினேன்!
மூடநம்பிக்கையில் முடங்கினேன்!
போலி வார்த்தைகளுக்கு மயங்கினேன்!
விட்டில் அடைந்து கிடைப்பதை விரும்பினேன்!
பாட்டன் பாரதியை வாசித்தேன்!
அகம் கேட்டது உயிரோடு இருக்கிறாயா என?
அப்போதுதான் உயிர், உயிர் பெற்றது!
விழி இருந்தும் இன்றுதான் விழி திறந்தது!
செவி இருந்தும் இன்றுதான் சொல் கேட்டது!
அகத்தின் ஒலி சத்தம்! அச்சம் தவிர்!
அகில உலகத்தை ஆளலாம் என!
மனதின் ஒலி! முயற்சித்துப் பார் வெற்றி கிட்டும்!
தயக்கம் தகர்ந்தது! அச்சம் துச்சமானது!
வெற்றி கிரீடம் சூட்டியது.
- சாந்தி சரவணன், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.