குறுங்கவிதைகள்
அவள் புடவையில்
ரோஜாப்பூக்களின் அச்சு
பட்டாம்பூச்சி தொடர்ந்தபடி.
*****
தனது உடலை முழுவதும்
மறைத்தபடி வைத்திருக்கும்
வெண்பூசணிக்காய்.
*****
வீடு திரும்புகிறாள்
பாதங்களில் ஓட்டிவரும்
கடற்கரை மணல்.
*****
ஓலைக்குடிசை மேல்
படர்ந்தபடி வளர்ந்திடும்
பாகல்கோடி.
*****
உடலை உரமாக்கிடும்
முருங்கை மரத்திலோ
வலிமைக் குறைவாக.
*****
தரையெல்லாம்
விழுந்திருக்கும் மகிழம்பூ
வாசம் பரவியபடி.
*****
பாக்குமரத் தட்டுகளில்
பிரசாதங்கள் கோவிலில்
இயற்கை சுகாதாரம்.
*****
முகநூலில் அவள்
தேடிய வரன் உடனடியாக
கிடைத்தது.
*****
கற்றாழைச்சாறு
உடலுக்கு தருகின்றது
மிகையான குளீர்ச்சி.
*****
ரோஜாக்கள் பூத்தபடி
பூந்தொட்டிகளில்நிறைந்திருக்கு
பூந்தொட்டிகளில்…
*****
கீரை விற்பவள்
காசுகளை பத்திரமாக
வைக்கிறாள் சுருக்குப்பைக்குள்.
*****
அறுவடை நாள்
வீட்டு வாசலில் நிற்க்கும்
கடன் தந்தவர்கள்.
*****
மரவெட்டியான்
கோடரியால் வெட்டுகிறான்
கனிகள் தரையில்…
- ஆர். எஸ். பாலகுமார், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.