கதற வைப்பது நியாயமோ?
அவள் அன்பெனும் ஓர் கோவில்
ஆனந்தத்தை அள்ளித் தரும் ஊற்று
இரத்தத்தை பாலாய் தரும் அன்னை
ஈகை குணம் கொண்ட தெய்வமுமவள்
உள்ளம் முழுவதும் அன்பு நிறைந்தவள்
ஊக்கம் அளிக்கும் ஊட்டச்சத்தும் அவள்
எண்ணியச் செயலை முடிப்பதில் வல்லவள்
ஏற்றம் தரும் ஏணியும் அவள்
ஐயம் தீர்த்து நம்முள் நிறைந்திருப்பவள்
ஒளியாய் வாழ்வைப் பிரகாசிக்க வைப்பவள்
ஓடியாடி மகிழ்வாய் வாழ வேண்டியவள்
வன்கொடுமைகளால் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறாள்
மனிதப் பிறவியின் புனிதமேப் பெண்...
புனிதத்தைப் புண்பட வைத்தல் நியாயமோ?
தன்கையால் கண்ணைக் குத்துவோமா?
இல்லையே...! கண்ணான பெண்ணைக்
கதறவைப்பது நியாயமோ?
- மா. முத்து காயத்ரி, சிவகாசி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.