கனவுகள்
ஏதோ
யதார்த்தத்தை மீறிய
ஒரு மாய விந்தை...
நரம்புகளில் நெளிந்து
ரத்தங்களில் ஊர்ந்து
மூளையைச் சிதைத்தது
மாய பிம்பம்
நடக்காத
நிகழ்வுகளைத் திரட்டி
கதாநாயக உருவங் கொடுத்து
கண் வழியாக அல்லாமல்
கனவுகளின் வழியாகத்
தன்னை நிரூபிக்க
மீண்டும் மீண்டும்
துரத்தித் துரத்திப்
பிணம்போல் கிடக்கும் உடலுக்குள்
அமைதியாக உள்நுழைத்து
சில கனவுகள்
அதிர வைக்கும்
அலற வைக்கும்
மோகிக்க வைக்கும்
இப்படியாக ஆயிரமாயிரம்
மூளை தரும் கற்பனைகளுக்கு
நினைவுகள் தரும்
பிம்பம்தான் கனவுகள்...!
- முனைவர் பெ. இசக்கிராஜா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.