கடவுளின் பசி
அடிநாதக் குழலே..!
நிரம்பி வழிந்தோடும்
இப்புவியின் அழகில் தான்
எத்தனை எத்தனை விந்தையர்கள்..!
உள்ளுக்குள் உக்கி
தனிமையின் விரகதாபமாய் விரதமிருந்து
எங்கெங்கோ தாவுகின்ற எண்ணங்களில்
இடறி தவறிப் பிழைத்து
எப்போதும் நினை மறவாத சிந்தையில்
நீயே…
ஒளி வழி தாகமாய்
வாழ்வினைக் கடத்திச் செல்கின்ற
வாழையடி வாழையாய்
கடந்து போன
வாழ்வியல் தலைமுறைகளில்
தவறில்லாத பக்குவமாய்
நாட்களைச் சில்லறைகளாய்
எண்ணி எண்ணிப்
பரிசளித்த இறைவனே
பாலூற்ற தேனூற்ற வக்கில்லாத
நான் எனும் நீ
என் பசி உன் பசியாய்
இன்று வரை
உனைக் கட்சிதமாய்
கடைப்பிடித்து வருகின்றேன்
ஆனாலும் என் பசி தீராமல்
உன் பசி தீராது... கடவுளே…!
- முனைவர் பெ. இசக்கிராஜா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.