என் திருமணம்
தாலி செய்ய கூலி கொடுக்கும் செலவு
நான் வைத்ததில்லை...!
கணையாழி மாற்றிடும் கல்யாணச் செலவு
நான் வைத்ததில்லை...!
தந்தியடித்து யாருக்கும் பந்தி வைக்கும் செலவு
நான் வைத்ததில்லை...!
ஊரைக்கூட்டி ஊர்வலம் போகும் செலவும்
நான் வைத்ததில்லை...!
உணவில் உப்பு, புளியில்லையென குறை சொல்ல
நான் வைத்ததில்லை...!
ஆதனம், சீதம் என்று பேசி அவதிகள் எதுவும்
நான் வைத்ததில்லை...!
கல்யாணப் பெயரில் இருவீட்டாரையும் கணக்குப் பார்க்க
நான் வைத்ததில்லை...!
காதலித்த காரணத்தால் யாருக்கும் பெரும் துன்பம்
நான் வைத்ததில்லை...!
காலத்தால் வந்த விதியென்று பெற்றோரும் மற்றோரும் உணர
நான் வைத்ததில்லை...!
காதலென்ற சொல்லால் இருவீட்டார் சம்மதத்துடன்
கடதாசியில் கையொப்பமிட்டு கரம்பிடித்தேன்
நான் என்னவளை...!
- கோ. கோகுலநாதன், நெல்லிக்காடு, மட்டக்களப்பு, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.