சின்னச் சின்னக் கவிதைகள்
பாரம்
வாழவே இல்லை
இருந்தும்
சலித்து விட்டது
இந்த பாரமான வாழ்க்கை!
நிரந்தரம்
இவ்வுலகில்
நமக்கானதென்று
எதுவுமே இல்லை.
நேற்று, இன்று
வேண்டுமானால்
உனதாக இருக்கலாம்
நாளை நீயே
இருப்பாய் என
உறுதியாகச் சொல்லிட
முடியுமா?
நிராகரிப்பு
நிராகரிப்பின் வலி
நிராகரிக்கப்படுபவர்களுக்கேப்
புரியும்!
ஒதுங்கி வாழ்வதை விட
ஒதுக்கப்படுதலே
மிகக் கொடுமையானது!
ஒத்திகை
கண்ணீரெல்லாம் பழகிப் போனது
பிறந்தவுடனே அழுது
ஒத்திகை பார்த்துக்
கொண்டதால்!
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.