வாழ்தலின் சமிக்ஞை!
மலிவு விலையில்
கிடைக்கிறது.
மகத்தான
சதி வலைகள்
கீழானதென தெரியவிடாமல்
கிளர்ந்தழைத்து.
கொடுக்கப்படும்
கோபத்திற்கு
இலவசமாகக்
கிடைக்கிறது
குரோதங்கள்
குருதிகள் சொட்ட.
வினோதமாக
விதைக்கப்படுகிறது
நம்பிக்கைகள்
வெல்வதற்கான சூத்திரம்
துரோகமென
சுயநலப் போக்கில்
அநீதமிழைப்பவர்களின்
பளபளப்பில்.
வேண்டிய மட்டும்
தரப்படுகிறது
விலையில்லாப் பொருட்களாக
வெறுப்புகள்
திரும்பிய பக்கமெல்லாம்
முக வாடலாக.
உயிர்ப்பாக இயங்குகிறது
உலகம்
விலை வைக்கவியலாது
சிந்தும் புன்னகையாலென
அறியாமல்
மடிந்து...!
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.