கனவில் வந்த தாரகையே!
கண் உறங்கும் போது கனவில் வருகிறாய்
நல்ல செய்திகள் பலவும் சொல்லித் தருகிறாய்
கவிப்படைக்கும் ஆற்றலை எனக்குத் தந்தாய்
பேரழகுத் தாரகையே எந்தன் தேவதையே
நித்தமும் இரவுக்கன்னியாய் தோன்றுகின்றாய்
உன்னை நேரில் பார்த்திட மனம் துடிக்குதடி
கனவில் கோலோச்சி வந்து செல்கின்றாயே
கேட்டிடும் வரங்களனைத்தும் தருகின்றாய்
விண்ணுலக அப்சரா அழகு தேவதை என்பேன்
வியத்தகு சிந்தனை வளம் நலம் பல தருகிறாய்
என்னுள் வியத்தகு சக்தியினை உணர்கின்றேன்
இன்று போல் ஏற்றமிகு வாழ்வினை தொடர்ந்து தா!
- ஆர். எஸ். பாலகுமார், சென்னை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.