இரத்ததானம் செய்வோம்!
உடலிலிருந்து எடுக்க இரத்தம் சேர்ந்திடும்
இதனால் இரத்ததானம் முன்னின்று செய்வோம்!
இரத்ததானம் முகாம்கள் நடத்திடுவோம் இங்கு
இரத்தத் தானத்தினை மருத்துவச் சேவையாக்குவோம்!
சாதி மத சமயங்கள் பேதம் தேவையில்லை
இரத்ததானம் செய்வது இன்று அத்தியாவசியமே
விபத்தில் சிக்குண்டவருக்குக் குருதி அவசியமே
அறுவை சிகிச்சைக்கு முதலிடம் இரத்தமே!
பணம் தந்தால் சொந்த செலவுக்கு உதவிடும்
உணவு தந்தால் ஒரு வேளை பசி தீர்ந்திடும்
இரத்ததானம் செய்தால் புது வாழ்வு கிடைத்திடும்
தானத்தில் சிறந்ததே இரத்ததானம் என்போம்!
மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று
மனமுவந்து இரத்த தானம் தந்திடலாம்!
துடித்திடும் உயிரினைக் காப்போம் நாமும்
மனித நேயம் வளர்ந்திடப் பாடுபடுவோம்!
பகைவரையும் நமது நண்பனாக்கிடலாம்!
எதிர் வரும் யமனையும் நாம் விரட்டிடலாம்!
மடியப்போகும் கால நேரத்தைத் தள்ளிடுவோம்!
மாற்றிடும் இரத்த தானமே சிறந்தது என்போம்!
- ஆர். எஸ். பாலகுமார், சென்னை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.