மௌனம்
என்னிலிருந்து
அதைச் சிதையாமல்
எடுக்கப் பார்க்கிறேன்.
அடுத்தொருவர்
சொல்பட்டு
உடைவதற்கு முன்
அதைக் கவனமாய்
கழற்ற வேண்டும்
நான்.
ஒருவர்க்கும்
அதன் மென்மையை
உணரவோ அறியவோ
திராணியில்லை.
பூவினும்
பஞ்சினும்
இறகினும்
நுரையினும்
மெல்லிய
அதன் மென்மையோ
அலாதி சுகம் நிறைந்தது.
என்னிடமிருந்து
வேறொருவர்
கைமாற்றிடவும்
மனமில்லையெனக்கு.
யாரோவொருவரால்
எனக்குச்
சொந்தமாக்கப்பட்டிருக்கிறது
இந்த மௌனம்.
அதைக் கையாள்வது
சற்று சிரமம் தான்.
இருப்பினும்
அது உடனிருக்கும்
தனிமைப்பிடிகள்
எல்லையில்லாப்
பேரானந்தத் தருணங்கள்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.