இது கலிகாலம்...!
பொய்களை
முன்மொழிந்துதான்
உண்மை
அம்பலமாகுமெனில்
அந்த உண்மை
ஒருவர்க்கும் தெரியாமலே
இருக்கட்டும்.
போரோ கொலையோ
பேரிழப்போ சரித்திரத்தை
மாற்றுமெனில்
அந்த சரித்திரம்
நிகழாமேலே போகட்டும்.
தந்தியறுந்த வீணை
ஸ்வரம் சேர்க்காதென்று
தெரியாமலா
இத்தனை காலம்
உழன்று கொண்டிருக்கிறாய்.
மூன்று முடிச்சுகள்
போதும்
அதுதான் எல்லை என்றான
பின்பு
அதன் மேல் இன்னொரு
முடிச்சைப் போடுவது
வீணே.
சக்கரங்கள் சுழன்றாலும்
நடை தொடர்ந்தாலும்தான்
இனிதே முடியும்
பயணம்.
சொல்வதையெல்லாம்
இவ்வுலகமேற்க
ஞானியாய் துறவியாய்
இருக்க வேண்டிய
அவசியமில்லை
மனிதனாக இருத்தலே
நலம்.
ஆசைகளை அறுத்து
அன்பை இறுகப் பற்று
கருணையும்
மனித நேயமுள்ளவன்தான்
மனிதன்.
இறுதியில்
ஆறடியும் சொந்தமில்லை.
சிதையின் சாம்பல்
வீசும் காற்றினில் காணாது
போகலாம்.
நீரில் தடமின்றி கரைந்தும்
போகலாம்.
இது கலிகாலம்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.