வாழ்ந்து முடித்து விட்டாலும்!
நான்கு பேர் தம்மைச் சுமக்கையில்
மனித வாழ்வு முடிவாகும்,
பூமியின் மடி தரும் அமைதி
பின் நம் பயணம் தொடங்கும்.
நண்பர், உறவினர் கண்ணீர் விட்டு
கை குவித்து வழி செய்கின்றார்,
பிறந்த நாள் முதல் எண்ணத்தோடு
அவசானம் இங்கே நிற்கின்றார்.
வெற்றியும் துவழ்ந்த முகமும்
வாழ்க்கையின் நாட்கள் பின் நின்றது,
சுமந்தவர்கள் சுமந்த பயமும்
அவன் பிணம் பேசத் தொடங்கியது.
பொருள், பதவி, புகழெல்லாம்
அவனுடன் ஒன்றும் செலவில்லையே,
ஆனால் அந்த நால்வரின் கையில்
அவன் நற்கருத்தே நிழலாய் நிற்குமே.
சுமந்தவரின் மனம் சுமக்கும்
அன்பின் சுவடுகள் மிஞ்சும்,
நனவிலும் கனவிலும் வாழ்வது
அவனின் நற்கீர்த்தி மட்டுமே.
காலமெலாம் காலடித் தடம்
காண்பது அவனின் பிணம் தான்,
வாழ்ந்து முடித்து விட்டாலும்
அவன் மனிதனாய் வாழ்ந்ததுதான்!
- த. ரூபன், திருகோணமலை, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.