தீர்மானம்
கேள்விகள் கேட்பது
சுலபம் என்றெண்ணி
நீ கேள்வியை தேர்ந்தெடுத்து
கொள்கிறாய்.
பதிலுரைக்கும்
கட்டாயத்திற்கு என்னை
வலிய திணிக்கிறாய்.
அதனால்
வருத்தமில்லை எனக்கு.
நீ கேள்விக் கணைகளை
என்மேல் தொடுக்கத்
தொடங்கிவிட்டாய்.
தாமதமின்றி உடனுக்குடன்
பதிலுரைக்கிறேன்.
நம்மிருவரில்
யார் திறமைசாலி
என்பதை
உன் முகம் காட்டுகிறது.
அடுத்து
கேள்விகள் கேட்க நீயே
என்னை
முடுக்கி விடுகிறாய்.
உன் நிலையறிந்து
சுலபத்தில்
பதிலுரைக்கும்படி
கேள்விகளை
எடுத்து வைக்கிறேன்.
நான் சாமானியனல்லயென
நீ தீர்மானித்ததை
வெட்ட வெளிச்சமாய்
காண்கிறேன்
என் அகத்தை உன் முகத்தில்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.