புரளும் பொழுதுகள்!
இரவுக்குள்
இருந்த
அநேகங்களில்
பிறறரியாத
ஒளிதல்கள்
மிகைத்திருந்தது
யாவருக்கும்.
உறுமும் இடியும்
ஒளிர்ந்திடும் மின்னலும்
மினிக்கிடும்
மின்மினிக்கும்
யாதொரு
கவலையுமில்லை
இத்தருணத்தில்.
ஊளையிடும் நாய்க்கு
உணவிட்டார்களா?
ஒரு வேளை
வானவர்களின்
தரையிரக்கமா
என்பதைப் பற்றிச்
சொல்ல எதுவுமில்லை
நான் வெகுதூரத்தில்
இருப்பதால்...
பகலாகக் கரைந்திடும்
இரவைப் பற்றிய
என் கவலைகள்
சொல்லி மாளாது
தூங்க வேண்டுமென்று
மனதோடு மல்லுக்கட்டிக்
கொண்டிருப்பதால்...!
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.