குறுங்கவிதைகள்
குடை வாங்கிய மகிழ்ச்சி
மழையில்லை
சிறுவனுக்கு
*****
சாதிக்கு ஒரு சுடுகாடு
தலை முழுக
ஒரே ஆறு
*****
இதயம் பறிபோனது
காவல்துறைக்
காதலருக்கு
*****
அமைதியாக இருக்கிறது
முதியோர் இல்லத்தில்
அப்பாவின் அலைபேசி
*****
இருந்தால் மேடு
இல்லையென்றால் பள்ளம்
வயிறு
*****
அகலமான சாலை
வரிசையாக சென்றன
எறும்புகள்
*****
காக்கை கரைந்ததும்
விருந்தாளி வரவில்லை
வறுமையின் வீடு
*****
கல்லூரி வாசல்
கவனமாகச் செல்லவும்
இதயங்கள் விபத்துப் பகுதி
*****
சோம்பேறி வீட்டில்
நிற்கவில்லை
கடிகார முள்
*****
அடிமைச் சங்கிலி
அவளும் உணரவில்லை
கொலுசு
*****
பெயரில் மரியாதை
வாழ்க்கை வெறுமை
திருநங்கை
- இரா. மே. இராமமூர்த்தி, சீர்காழி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.