பிரிவும்... பிரிப்பதும்...!
அப்படி என்ன
பேசிக் கொள்கிறது
பறவைகள்...?
நீ கொக்குளம்
நான் கருமாத்தூர்
நீ வாலாந்தூர்
நான் திடியன்
நீ பத்தூர்
நான் புத்தூர்
எனப் பிரிந்தே தான்
பறக்கிறதோ...?
எனக்கென்னவோ
தெரிகிறது
பிரிவும்
பிரிப்பதும்
மனசுக்குள்
மனிதனுக்குள்...
(
குறிப்பு:மேலிருக்கும் கவிதையில் இடம் பெற்றிருக்கும் கொக்குளம், கருமாத்தூர், வாலாந்தூர், திடியன், பத்தூர், புத்தூர் ஆகியவை, மதுரை மாவட்டத்தில் பிரமலைக்கள்ளர் சமூகத்தினர் அதிகமாக வாழும் சில ஊர்கள். இந்த ஊர்களை வைத்தே இவர்களுக்கான உறவுமுறைகள் அமைந்திருக்கின்றன)
- ம. சேரன், வாலாந்தூர், மதுரை மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.