பாத்திரம்
சமையலுக்கடுத்து
சமைத்தப் பாத்திரங்களைக்
கழுவி வெயிலில்
காய வைத்து
கிருமிகள் தொற்றாமல்
காத்த அக்கால
அன்னையரின்
ஆரோக்கியப் பேணலை
புரிதல் இல்லாமல்
படித்த பண்பாளரென்று
பெண்ணியம் பேசி,
படிக்காதப் பாமரரே
பாத்திரம் கழுவ
பிறந்தவரென்று
பிதற்றித் தள்ளி நிற்கும்
மாந்தார்கள்
மத்தியில்
மதிப்பிழந்தும்
சிந்தித்துச்
சுத்தம் செய்யும்
பாத்திரத்தையே
வாழ்வாதாரமாய்
வகையாய்ச் செய்து,
தன் நிலையையும்
தன்னைச் சார்ந்தோரையும்
உயர்த்தும் இக்கால
அன்னையும் பெண்ணும்
படிக்காத பாமரருமல்ல
படித்தப் பெண்ணியமுமல்ல
செவிலியாருக்கு ஒப்பாக
தொற்றற்ற
ஆரோக்கியத்துக்கு
பாத்திரமாகிறார்கள்...!
- கா. சுந்தரராஜன், சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.