திருமகள்
தாமரை மலர்கள் கூடிச் செய்த
புண்ணியம் கோடி
பாத மலர்களைத் தேடி
தஞ்சம் அடைந்தது உனை நாடி
இடை உரசும் நெட்டை நெடுங் கூந்தலும்
நளினம் புகுந்த பாதமும்
அடக்கி ஆளும் எழிலின் சாயலே
மைபொதி விழி கண்டு களைத்த விழிகள்
சிவந்த நின் இதழாய் கொதிக்க
நின்னழகு ஏதென எதைக் காண
தாமரைப் பூவில் அமர்ந்த தேவி
எங்கள் கண்ணைப் பறித்துத் தங்கக்
குடத்தை நிரப்பும் ஒவ்வொரு தங்கக் காசும்
போடும் இரைச்சல் தான் என்ன
அருள் மாரிப் பொழிவின் அருவிச் சத்தமோ
செல்வச் சீமாட்டியே
க்ராதகன் பாதகன் இல்லம் தேடி
அடையும் உனைச் சிறையிலிடவா
- மு. இராமர் மாசானம், குப்பம், ஆந்திரப்பிரதேசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.