பூமிக்களம்
களத்தோடு சேர்த்துப் பாலை அருந்தும்
பூனைக் குட்டியாய்
நிலத்தோடு சேர்த்துப் பயனை உறிஞ்சும்
பயனாளியாய்
வேறு நிலத்தைத் தேடி நகரும் நாடோடியாய்
நகர்ப் படியாய்
கண்டதை அழித்து விழுங்கி முழுங்கும்
மனிதப் பூதமாய்
அழிவின் காலில் தொங்கும் கலாச்சாரத்தில்
செத்தொழிந்த மனிதத்தின் உருவாய்
வேங்கைக் காட்டில் உலவும் மானாய்
தூண்டில் வலைக்குக் காத்திருக்கும் மீனாய்
இருக்கும் நமக்கு வேறு நிலமாய் செவ்வாய்
பூனைக்கு வேறு களமாய் பாலித்தீன் செரட்டை...
- மு. இராமர் மாசானம், குப்பம், ஆந்திரப்பிரதேசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.