வாழ்க்கையின் பொழுதுகள்
பிரபஞ்சத்தின்
மைய இருள் புள்ளியில்
தொடங்குகிறது
மொத்த உயிர்களின்
வாழ்க்கையும்.
கனவுகளை
எவரிடமும் கொடுத்திட
விழைவதில்லை
நம் எல்லோர்
மனங்களும்.
உறக்கத்தின்
சுமையை வேரோடு
கழற்றிய பின்
அவரவர் வாழ்க்கையின்
கூறுகளைக் கட்டுடைத்து
கொடுத்து விடுகிறது
காலம்.
வானில் முளைத்திடும்
எதையும்
நம்மில் விதைத்தவர்
யாருமில்லை.
வானம் மட்டும்
இரவு பகலென்ற
ஆடைக்குள்
தன்னை முழுமையாய்த்
திணித்துக் கொள்கிறது.
தினம்தினம் தேடலில்
அகப்படாது
வழக்கம் போல் தொலைகிறது
நம் வாழ்க்கையின்
பொழுதுகள்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.