அப்பாவிற்குக் கடிதம்!

அப்பா,
உங்களிடம் வேறொன்றும் கேட்க
ஆசை இல்லை...
ஒன்றே ஒன்று தான்
எங்களோடு தீபாவளி,
பொங்கல் மட்டும்
கொண்டாட வந்து விடுங்கள்
போதும்...!
எனக்கு ஐந்து அல்லது ஆறு
வயது இருக்கும் போது
கொண்டாடிய நாட்களை
நினைவுப்படுத்திக் கொண்டே
பதினைந்து வருட காலம்
கழிந்துவிட்டது...
எவ்வளவு நாட்கள்தான்
அந்நியர்களைப்
போல அலைப்பேசியிலேயே
வாழ்த்துகளைக் கூறுவது...
வாழ்த்துகளைக் கேட்பது...?
உங்களைக் கட்டியணைத்து,
முத்தமிட்டு வாழ்த்துகளைப்
பரிமாறிக் கொள்வதற்குக்
காத்திருக்கிறோம்...!
இந்தக் கொண்டாட்டத்தை விட
உங்களைப் பார்க்க வேண்டும்
என்றுதான் ஆசையாக இருக்கிறது
அப்பா... எங்களை காண
எப்போது வருவீர்கள் ???அப்பா,
உங்களிடம் வேறொன்றும் கேட்க
ஆசை இல்லை...
ஒன்றே ஒன்று தான்
எங்களோடு தீபாவளி,
பொங்கல் மட்டும்
கொண்டாட வந்து விடுங்கள்
போதும்...!
எனக்கு ஐந்து அல்லது ஆறு
வயது இருக்கும் போது
கொண்டாடிய நாட்களை
நினைவுப்படுத்திக் கொண்டே
பதினைந்து வருட காலம்
கழிந்துவிட்டது...
எவ்வளவு நாட்கள்தான்
அந்நியர்களைப்
போல அலைப்பேசியிலேயே
வாழ்த்துகளைக் கூறுவது...
வாழ்த்துகளைக் கேட்பது...?
உங்களைக் கட்டியணைத்து,
முத்தமிட்டு வாழ்த்துகளைப்
பரிமாறிக் கொள்வதற்குக்
காத்திருக்கிறோம்...!
இந்தக் கொண்டாட்டத்தை விட
உங்களைப் பார்க்க வேண்டும்
என்றுதான் ஆசையாக இருக்கிறது
அப்பா... எங்களை காண
எப்போது வருவீர்கள் ???
- அ. அனுபிரியா, கோயம்புத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.