நீயும் நானும்
அடுக்கி வைத்து
நூலகமாக்கிவிட்டேன்
எடுத்துப் படிக்காமல்
பழையதாக்கிவிட்டேன்
புத்தகம் போல்
எட்டு ஆண்டுகளாய்
எந்த தொடர்புமற்று
இருக்கையை வைத்துள்ளது
அலைபேசி எண்களில்
நானும் அவனும்
முகம் மாறி இருக்கலாம்
முகவரி மாறி இருக்கலாம்
எண்ணும் மாறி இருக்கலாம்
என்னமோ ஆகியும் இருக்கலாம்
இப்படி
இருவரும்
நினைத்துக் கொண்டு தான்
இருக்கிறோம்
ஒருமுறையும் அழைப்பு விடுக்காமல்
நீயும் நானும்
(
குறிப்பு:மேலிருக்கும் கவிதையில் இடம் பெற்றிருக்கும் கொக்குளம், கருமாத்தூர், வாலாந்தூர், திடியன், பத்தூர், புத்தூர் ஆகியவை, மதுரை மாவட்டத்தில் பிரமலைக்கள்ளர் சமூகத்தினர் அதிகமாக வாழும் சில ஊர்கள். இந்த ஊர்களை வைத்தே இவர்களுக்கான உறவுமுறைகள் அமைந்திருக்கின்றன)
- ம. சேரன், வாலாந்தூர், மதுரை மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.