பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
வயல் முழுதும்
தங்கம் பொழியும்
உழவரின் உழைப்பில்
கருவாகி உருவாகிய
பொங்கல் திருநாளில்
பால் போல்
பொங்கட்டும் - நம்
வாழ்வில் இன்பம்!
ஆதவன் சிரித்து
உதிக்கும் நாள்
சுகமாய் சேரும்
உறவுகளின் மனசு!
கரும்பின் இனிமை
போலவே கருணை
நிறைய வாழ்வோம்
நாள்தோறும்!
மண் மணக்கும்
குறிஞ்சி முல்லை
மருதம் நெய்தல்
மரபைப் போற்றி!
பாலையைப் பண்படுத்தி
ஆறாம் திணையான
பனியும் பனி சார்ந்த
அகன்ற உலகையும்
அகத்தில் உள்ளடக்கி
பொங்கல் வைத்து
மகிழ்வோம்!
மரபு சாராத
சிந்தையை எரிவூட்டி
மகிழ்வோடு தலைநிமிர்ந்து,
தமிழர் திருநாள்
பொங்கலில் தலைமுறைகள்
தழைத்திட வாழ்த்துகள்!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.