இலையுதிர்காலத் தனிமை!
வசந்தக் காலத்தில்
பூப்பூத்து - ஊரெங்கும்
மணம் வீசி
காய்க் காய்த்துப்
பழம் தந்த
மரத்தின் கிளைகளில்
நாளெல்லாம் ஆடிப் பாடி
மகிழ்ந்த பச்சைக் கிளிகள்
வாழ்க்கைத் தேடிப்
பறந்துப் போய்விட்டன!
இறக்கை முளைக்காத
இளங் கிளிகளுக்கு - அன்று
ஊஞ்சல் கட்டி ஆட்டிய
அதே ஞாபகத்தில்
வச்சக் கண் வாங்காமல்
வழிமேல் விழி வைத்து
ஏக்கத்தோடு பார்த்தவாரே
காத்துக் கிடக்கின்றது - மரம்
கிளிகளின் வருகைக்காகக்
இலையுதிர் காலத்தில்
உறவாட யாருமின்றி...!!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.