கைரேகையின் பலன்!
உனது கைரேகை
மிகவும் சக்தி வாய்ந்தது!
இந்தக் கைரேகைக்கு
பலரை வாழ வைக்கும்
அற்புத ஆற்றல் உண்டு!
இராசியான கை - ஆகையால்
உனது கையை யாரிடமும்
காட்டாதே என்றான்
ஜோசியக்காரன் அன்று!
ஆனால் இன்று
எனது கைரேகையை
உருட்டும் போதெல்லாம்
சிலர் கோட்டைக்கும்
போகிறார்கள் - ஆம்
நாட்டையும் ஆள்கிறார்கள்!
அவ்வளவு சக்தி
வாய்ந்தது என்பதைப்
புரிந்து கொண்டேன் - ஆனால்
எனது கைரேகையால் எனக்கு
எந்தப் பலனும் இல்லை என்று
சொல்லத் தவறிவிட்டான்
அந்த ஜோசியக்காரன்!!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.