நாங்கள் வாழ்ந்த வீடு!
அவள் கட்டிய
அன்பு வீட்டிற்கு
விருந்துக்கு அழைத்தாள்!
நானும் வீட்டிற்குள் சென்றேன்
அவள் கட்டிய மண் சுவரை
மிதித்து விடாமல் !
தொட்டாங்குச்சியால்
ஈர மண் கொண்டு
செய்யப்பட்ட - இட்லி
தண்ணீர் ஊற்றி நன்றாகக்
குழைத்து அரைத்த - மண் சட்னி
இலையில் வைத்துக் கொடுத்தாள்!
நாக்கைச் சொட்டாம் போட்டு
நானும் சாப்பிட்டேன் - நான்
சாப்பிடுவதைப் பார்த்து
இரசித்தவாறே - என் எதிரில்
அமர்ந்து கொண்டு மகிழ்ச்சி
பொங்க அவளும் பரிமாறினாள்!
நாங்கள் அன்று வாழ்ந்த வீடு
மண் வீடு அல்ல
அன்பால் கட்டிய
அவளின் கனவு வீடு!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.