காலம் நூறானாலும்...!
உண்மையான காதல் என்று
ஒன்று உள்ளது
உன் கண்ணைக் கண்ட பின்புதானே
உண்மையானது
காற்றைப் போலக் காதல் கூட
உருவமற்றது
நேற்று இன்று நாளை போல
நாளும் வளர்வது
காதலுக்குள் தேய்பிறை
வளர்வதில்லையே
புரிதலுக்குள் வளர்பிறை
தேய்வதில்லையே
உன்னைப் பார்க்கத்
துடித்தக் கண்கள்
புண்களானது
பேசாத நாட்கள்
தினமும் ரணங்களானது
பார்க்கவில்லை பேசவில்லை
என்ற போதிலும்
பாசம் கொஞ்சம் குறையவில்லை
இருவர் மனதிலும்
அழுது தொழுது பார்க்கத்
துடித்தேன் உனது விழியே!
பார்த்த பின்பு
ஊமையானது எனது மொழியே!
பக்கமிருந்தால்
பாசம் பேசுமென்ற கூற்று
உண்மை இல்லையே
தொலைவில் இருந்தும்
தொட்டுக்கொள்ளும்
நினைவு உண்மையே
தலைகோதும் தாயை போல
உன்னைப் பார்க்கையில்
பாலை கூட சோலையாகும்
உந்தன் பார்வையில்
சதியெனும் கைப்பிடிக்குள்
சிக்கிக்கொண்டது
காதல் புரிதலெனும் மதிக்குள்
முழுமையானது
கணவன் மனைவி உறவுக்குள்
ஒளிவுமறைவு இல்லையே!
காலம் நூறானாலும் காதல்
குறைவதில்லையே!
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.