உயர்தமிழ் நீயானாய்...!
உயர்தமிழ் நீயானாய்...
எனக்குள்ளே உணர்வானாய்...
என் மொழி நீயானாய்...
தமிழ்த்தாயே!
ஒவ்வொரு நொடிப்பொழுதும்...
ஒவ்வொரு இமைப்பொழுதும்...
உன்னை நான் உச்சரிப்பேன்...
தமிழ்த்தாயே!
வாழ்க்கை எனும் ஓடையிலே...
தினம் என்னைப் பாதுகாத்து...
இன்னுயிரை வாழ வைத்தாய்...
இன்னுயிரை வாழ வைத்தாய்...
(உயர்தமிழ் நீயானாய்....)
உன் சொல்படி நான் நடந்தேன்...
உன் நிழல் பின் தொடர்ந்தேன்...
உன் நினைவில் வாழ்வதற்கே...
உயிர்தமிழே! உன் நினைவில் வாழ்வதற்கே...
கருவினில் நான் உணர்ந்தேன்...
செவிதனில் குரல் அறிந்தேன்...
விழிதனில் நான் கண்டேன்...
கண்டதும் மனம் நிறைந்தேன்...
உன்னைக் கண்டதும் மனம் நிறைந்தேன்...
நான் என்றால் நீயே...
நீ என்றால் தாயே...
நீயின்றி என்னில்...
நிலை ஒன்றுமில்லை...
உயிரணுவிலும் நீயே இருப்பாய்...
உயிரிலும் உணர்வை அளிப்பாய்...
(உயர்தமிழ் நீயானாய்...)
வாக்கினில் உண்மை தந்தாய்
நாவினில் அருந்தமிழைத் தந்தாய்
வாழ்வையும் நீயே தந்தாய்
உயர்தமிழே ! வாழ்வையும் நீயே தந்தாய்...
மொழிதனில் அறிவைத் தந்தாய்
விழிதனில் தெளிவைத் தந்தாய்
எனக்கான வாழ்வைத் தந்தாய்
நினைவையும் நீயே தந்தாய்
உயர்தமிழே! நினைவையும் நீயே தந்தாய்...
மனதிற்கு இன்பம் தந்தாய்...
மதிக்குச் செல்வம் தந்தாய்...
என் வாழ்வின் அர்த்தம் என்ன???
நீ செய்யும் அதிசயத்தில் புரிந்து கொண்டேன்...
தாய்த்தமிழே! உனக்கென என்ன செய்தேன்???
உன் நினைவினில் உயிரை
சுமந்தேன்...
மறுபிறவியிலும் உன்னையே தொழுவேன்...
(உயர்தமிழ் நீயானாய்....)
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.