மனிதனின் தற்பெருமைகள்
நான்
திங்கள் கிழமை விரதம்
புலால் தவிர்ப்பேன்!
செவ்வாய்க் கிழமை விரதம்
புலால் தவிர்ப்பேன் !
புதன் கிழமை விரதம்
புலால் தவிர்ப்பேன்!
வியாழக்கிழமை விரதம்
புலால் தவிர்ப்பேன்!
வெள்ளிக் கிழமை விரதம்
புலால் தவிர்ப்பேன்!
சனிக்கிழமை விரதம்
புலால் தவிர்ப்பேன்!
ஞாயிற்றுக் கிழமை
அனைத்தையும் உண்பேன்!
எதையும் தவிர்க்க மாட்டேன்!!
அனைத்தையும் அமைதியாகக்
கேட்டுக் கொண்டிருந்த ஆடு
தலையை ஆட்டிக்கொண்டு
புன்னகையோடு சொன்னது
நான் எல்லா நாட்களிலும்
புல்லை மட்டுமே மேய்கிறேன்
உமது விரதம் முடியும் வரை!!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.