மனதின் வாழ்க்கை!
இந்த மனம் எப்போதும்
தனித்து இருப்பதில்லை!
தனக்குப் பிடித்தவர்களோடு
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது!
சில நேரங்களில்
மிகவும் நெருக்கமாக இருக்கிறது!
சில நேரங்களில்
பிணக்கம் கொள்கிறது!
சில நேரங்களில்
அன்பு செலுத்துகிறது!
சில நேரங்களில்
ஏமாற்றம் அடைகிறது!
சில நேரங்களில்
நினைத்து அழுகிறது!
சில நேரங்களில்
கோபம் கொள்கிறது!
சில நேரங்களில்
ஆறுதல் தேடுகிறது!
சில நேரங்களில்
நெஞ்சோடு நெருங்கிப் பேசுகிறது!
சில நேரங்களில்
இறுமாப்பு கொள்கிறது!
சில நேரங்களில்
விலகிச் செல்கிறது!
சில நேரங்களில்
பிரிவை எண்ணி வருந்துகிறது!
சில நேரங்களில்
விலகி இருந்து நேசிக்கிறது!
ஆம், இந்த மனம்
வாழந்து கொண்டுதான்
இருக்கிறது - எப்போதும்
தனக்குப் பிடித்தவர்களோடு
தனக்குப் பிடித்த விதத்தில்!!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.