மெளனப் போரட்டமா?
ப்ரியமானவளே
பாதையில் பதிந்த
உன் பாதச்சுவடுவேனால் அழிந்துவிடும்
ஆனால் என் மனதில் பதிந்த
உன்பிம்பச்சுவடு கனவிலும் அழியாது
பூவைப் பார்த்து புன்னகை பூக்கின்றாய்
ஆனால் என்னைப் பார்த்து புயலாய் மாறுகிறாய்
நான் என்ன வானிலை அறிக்கையா?
நீயோ இயற்கையை நேசிக்கின்றாய்
நானோ உன் இதயத்தை நேசிக்கின்றேன்
என் அன்பே
இரவு பகலுக்காக காத்திருக்கிறது
துன்பம் இன்பத்திற்காக காத்திருக்கிறது
உழைப்பு வெற்றிக்காக காத்திருக்கிறது
நானும் உனக்காக காத்திருக்கிறேன்
உன்னை சந்திக்கின்ற ஒவ்வொரு மணித்துளியும்
எனக்கு மறவாது கண்ணே
உன் மெளனம் எனக்கு சம்மதமா?
இல்லை உன் மனதில் மெளனப்போராட்டமா?
-சுபஸ்ரீஸ்ரீராம், பஹ்ரைன்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.