இன்னுமொரு சுதந்திரப்போர் !!
ஆட்டு பேரம்
மாட்டு பேரம் மாறிப்போய் ...
மனிதர்களின் பேர நேரம்...
ஆம்!
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்
என்ற பெயரில்...
காலத்தின் கோலமா ?
ஜாயத்தின்மரணமா ?
தூபமிடும் நெஞ்சங்கள்
துரியோதனர்களா ?
இறைவா உன்
அவதாரம் எப்போது...?
கீதாசாரம் ஏற்று
அர்ஜுனர்களே, அன்னா கசாராக்களே
படை எடுங்கள் .
புனித பாரதத்தை
விழுங்கத் துடிக்கும்
நரகாசுரர்களை நாசமாக்கிட
நீதிதேவதையை
சிம்மாசனம் ஏற்ற ...
தியாக தீபங்களே
சாட்டையோடு வாருங்கள்...!
கூன் விழுந்து போன சட்டங்கள்...
சகாராவாகிப் போன மனங்கள்...
மறு ஜென்மம் எடுக்கட்டும்
கறைகளற்ற புனித பாரதம்...
துயவர்களே
உங்கள் அடி எடுப்பில்
அழியட்டும் அக்கிரமங்கள்.
வெள்ளைக்காரர்களிடமிருந்து மீட்ட
நம் நாட்டைக்
கொள்ளைக்காரர்களிடமிருந்து மீட்க
மீண்டும் தேவை...!
இன்னுமொரு சுதந்திரப்போர் !!
-கற்பகம் ரவி

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.