துன்பங்கள்
நண்பர்களே
வேடிக்கை வாழ்க்கையில்
வாடிக்கையாய் சுமக்கிறோம்
துன்பங்களை
மறைக்கும் துன்பங்கள்
மறைவதில்லை மறு பிறப்பு
பெறுகின்றன
கூட்டி சேர்கின்றன
துன்பங்கள், பின் கழித்து
அழிகின்றன இன்பங்கள்
வலிகளை இயல்பாய்
சுமக்கிறோம் துன்பங்களோடு
இலவச இணைப்பாய்
உலக உயிர்களில் மிச்சம்
இருக்கிற எச்சங்களாய்
துன்பங்கள்
தூக்கி சுமக்கும் போது
மட்டும் சுமையாய்
இறக்கிய பின் இலகுவாய்
மென்மையாக உணர்கிறோம்
துன்பம் மிகுந்த வலிகளை
மன உறுதியுடன்
நீண்ட வாழக்கையில்
சீண்டிய துன்பங்கள்
அழிவதில் உன் வாழக்கை
இனிக்கிறது....
- ராசை நேத்திரன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.