தாயே தமிழே போற்றி ...!
மார் ஆடும் வன் மறவர் தீரம் போற்றி ...!
மலர் ஆடும் மென் தமிழர் காதல் போற்றி...!
அகமாகிப் புறமான தமிழே போற்றி...!
அறம் ஆகும் நம் மறையாம் குறலே போற்றி...!
சுரம் ஆடும் சுந்தர நல் யாழே போற்றி...!
எம் சுற்றம் எல்லாம் சூழ்ந்த ஐ நிலமே போற்றி...!
சிலம்பாகி மேகலையும் வலையுமான
என் செந்தமிழே உன் அணியாம் நூலே போற்றி...!
மண் ஏகி விண் ஏகி நின்ற தாயே ...!
அன்று புணல் ஓடும் அனல் ஓடும் புகுந்த தமிழே ...!
உன் பெருமை உளம்கொண்டு உணர்ச்சி தேக்கி
உனக்கடிமை செய்வதென முடிவு கொண்டேன் ...!
- ஆதிரை சித்தன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.