இயற்கை அன்னையைக் காப்பீர்
கன்னம் சிவந்த ஆப்பிள்
வண்ணக் கண்கள் செர்ரி
வேரில் விளைந்த பலா
வானில் வலம்வரும் நிலா!
கோள்கள் சுற்றும் தமிழ்மகன்
பூமிப்பந்து ஏந்தும் திருமகள்
வாள்கள் நாணும் விழியாள்
வள்ளல்கள் நாணும் இடையாள்
பசுமை குழந்தை பசிதீர
நீலஆடை விலக்கி பால்தருவாள்
பகைமை மனங்கள் இணைய
பங்கய கரம் அணைப்பாள்
இயற்கை என்னும் இளந்தலைவி
இன்னலுற்றாள் மன மாசால்
செயற்கை விரும்பும் கயவர்கள்
செய்யும் சிறுமதி செயலால்!
இயற்கையை துகிலுரித்த வீணர்கள்
இன்றும் வாழ்கிறார் வெட்கமின்றி
அன்னைக்கு மானபங்கம் நிகழ்ந்தால்
அனுமதிப்பீரோ சொல்வீர் அறிவார்ந்தோரோ
- விஷ்ணுதாசன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.