"பிரா"மிஸ்!
மடித்தும் அடுக்கியும்
தொங்கவிட்டும் கசக்கியும்
விற்றுவிடுகிறார்கள்
பிராவை.
புறாவைக்கூட
பிரா என சொல்லி
நமுட்டும்
வாலிப வாய்களும்
இல்லாமல் இல்லை.
நவீன கணவன்மார்களும்
கடைகளில்
மொய்க்கிறார்கள்
மனைவிகளுக்கு
பிரா வாங்க .
அளவுக்குப் பதிலாக
விரல்களைக் குவித்தும்
துணியை விரித்தும்
கசக்கி பைக்குள்
திணித்துக் கொள்கிறார்கள்
இதையெல்லாம்
கணவனிடம்
சொல்லி நியாயம் கேட்க
அவரும் நம்புவதாக இல்லை.
கடைசியாக நானும்
சொல்ல வேண்டியதாகிவிடுகிறது
வேண்டா வெருப்பாக
ஒரு "பிரா"மிஸ்!
- அண்டனூர் சுரா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.