வருங்காலம்
இப்படியும் சிந்திக்கலாம்..! (சுனாமி நினைவுகளுக்காக)
அதோ –
வெகு தூரத்தில்…
யாரும் வாழ்ந்திராத
தரைகளாக…
முருகைக் கற்பாறைகள்
ஏதோ ஜெபிக்கின்றன…
கள்ளிச் செடிகள்
ஏதோ கதை சொல்கின்றன…
கடற்கரை மணலில்
ஏதேதோ கால் தடங்கள்
கண்டு பிடிக்கப் படாமல்
உக்கிய என்புத் துண்டுகள்...
8.31ல் நின்றுவிட்ட
கடிகாரங்கள்…
என்றோ பசுமை பேசி
பாழடைந்த கிராமங்கள்…
இன்னும் கண்ணீர் விடுகின்ற
சுறாமீன் முட்கள்…
இன்னமும் மூச்சுவிடும்
கடல் நீர்த்துளிகள்…
எல்லாமே
என்ன மாயைகள்…?
சென்ற தலைமுறையின்
சரித்திரத்தைப்
புரட்டிப் பார்ப்போம்
வா…!
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.